Saturday, June 30, 2012

சினிமா விமர்சனம் - சகுனி

ஸ்டுடியோ  கிரீன் மூவீஸ் தயாரிப்பு ... தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் ... மெகா ஹிட்டான சிறுத்தைக்கு பிறகு கார்த்தி மற்றும் சந்தானம் சேர்த்து நடிக்கும் படம் ... இதுவரை இல்லாத அளவு 1150 + தியேட்டர்களில் வெளியாகும் படம்.. என்று அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளி வந்த படம்... ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ததா? ...

கதை :
தன் குடும்பத்தில் கடைசியாக மிச்சமிருக்கும் ஒரே வீட்டை காப்பாற்ற அரசியல்வாதிகளை நாடிவரும் நாயகன்.. அரசியல்வாதிகளின் உண்மை சுயருபம் தெரிந்து தன் வீட்டை எப்படி மீட்டான் என்பது தான் கதை ... (என்ன ... தூள் இரண்டம் பாகம் பார்த்த பார்த்த மாதிரி இருக்கின்றதா?...) இது தான் படத்தின் மிக பெரிய தவறு ... டைரக்டர் சார் ... காப்பி அடிக்க வேற படமே கிடைக்கவில்லையா ? இப்படி காப்பி அடிக்கிறது தெரிற மாதிரியா காப்பி அடிக்கிறது ....

கதாபாத்திரங்கள் :
கார்த்தி .... கூலாக வந்து ஏதேதோ செய்கிறார் ... நடிக்கும் வாய்ப்பு ?.... அவர் என்ன செய்வார் பாவம்.. கதையும் திரைக்கதையும் பலம் இல்லாத பொது..
படத்தில் இவரும் சந்தானமும் வரும் காட்சிகள் மட்டும் முழு படத்தையும் தாங்கிபிடிக்கின்றன..

சந்தானம் ... படத்தில் பாராட்டு வாங்கும் ஒரே ஆள் .. சிரிக்காமல் இவர் அடிக்கும் டைமிங் காமடிதான் படத்தை காப்பாற்றுகிறது ..

பிரணீதா .... அழகாய் இருக்கின்றார் .. (இதை கூட அவரை பற்றி சொல்ல வேண்டுமே என்று தான் சொல்கிறேன் ..) படத்தில் அவருக்கான வேலைகளும் அவ்ளோதான்....

ராதிகா... படத்தில் கவனிக்கப்படும் ஆள்.. அனால் அவருக்கான  காட்சிகள் அதிகம் இல்லாததால் ... மேயர் ஆனதும் தன் கடமையை செய்து முடித்துவிடுகிறார் ...

பிரகாஷ்ராஜ் .... இன்னும் எத்தனை படத்தில் தான் அரசியல்வாதியாக நடிப்பிங்க சார்... முதல் அமைச்சருக்கான அதிகாரம் இவர் கையில் இருக்கும் பொது கார்த்தியை சமாளிக்க வழி தேறியமால் தன் கட்சியினரிடம் மட்டும் வீரவசனம் பேசி தானும் இப்படத்தில் இருக்கிறேன் என்று காட்டுகிறார் அவ்ளோதான் ....

தொடரும் ......

Tuesday, August 17, 2010

wHo nEEdeD fRee - Abouse Government Policy

ஹலோ நண்பர்களே!

இலவசமா கொடுத்தா எதை வேண்டுமானாலும் வாங்கிகுவான் நாம தமிழன். என்ன சரி தானே. இப்போ தமிழ்நாட்டுல நடப்பது இது தான்.

அரசியல்வாதி ஒட்டுக்காக கண்டுபிடித்த ஜனநாயக வார்த்தை தான் இந்த இலவசம்.
யார் கேட்டார் இந்த இலவச ஜனநாயகத்தை.

இலவச டிவி : நாட்டில் மனிதனுக்கு உண்ணும் உணவிற்கே வழியில்லை. பிறகு எதுக்கு இந்த டிவி?. இந்த தமிழக முதலமைச்சரை தோழமை கட்சிகளும், சினிமா உலகத்தினரும் இந்திரனே சந்திரனே என்று புகழ்வதை பாமரமனிதன் வயிற்று பசியுடன் கண்டு இன்பம் பேரவா?.

நாட்டுல பாதி நேரம் கரண்ட் இல்லாதபொது பிறகு எதுக்குயா இந்த டிவி.

இலவச மருத்துவ காப்பிடு : நல்ல திட்டம் தான் பிகார் போன்ற மருத்துவ வசதி மேன்மை அடையாத மாநிலத்துக்கு மட்டும். என்ன வசதி இல்லை இந்த தமிழ் நாட்டில். பக்கத்துக்கு தேசமான பாகிஸ்தானில் இருந்து நம்ம சென்னைக்கு மருத்துவ வசதி வேண்டி வரும்போது, இங்குள்ள ஆரசு மருத்துவமனைகளை இன்னும் சிறப்பாக செயல்படுத்தினாலே என் போன்ற பாமரமக்களுக்கு எல்லா சிகிச்சையும் கிடைத்துவிடுமே. பிறகு யாருக்கு இந்த திட்டம். மக்களுக்கும் ஆரசுக்கும் இடையில் இருப்பவர்கள் தங்களுக்கு பணம் சேர்கவா?

இலவச காஸ் அடுப்பு :  கி கி கி கி....... நாட்டில் என் போன்ற பாமரமனிதன் ரேசனில் போடும் மண்ணெண்ணையை முப்பது ரூபாய் கொடுத்து வாங்க முடியாத அளவிற்கு மற்ற பொருள்களின் விலைவாசி உயர்வு இருக்கும்பொது, காஸ் அடுப்பு எதற்கு? . வீட்டு பரண்மேல் அழகாக அடுக்கி வைக்கவா?. பாமரமனிதன் இதை வேறு என்ன செய்ய முடியும்.

இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் வரபோகுது. இன்னும் இலவசங்கள் பெருகபோகின்றன. தேர்தல் நேரத்தில் கிடைக்கும் சொற்ப பணத்தை பெற்றுக்கொண்டு தனது ஜனநாயக கடமையாக தன்னையே அடமானம் வைக்கவிருகிறான் தமிழன் (என்னையும் சேர்த்துதான்). பாவம் தமிழன் வேறு என்ன தான் செய்ய முடியும் அவனால்.

வாழ்க ஜனநாயகம். வளர்க தமிழனின் ஜனநாயக கடமை.

இது  பிற மனிதர்களின் உள்ளத்தை காயபடுத்த அல்ல. என் காயத்திற்கு மருந்திட மட்டுமே.

சிந்திப்பாயா தமிழா!

எதிர்பார்ப்புடன்,
உன் நண்பன்.

HoW cAn I SaVE My INdiA

ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.

மக்கள் தொகை: 110 கோடி

1.  9 கோடி ஓய்வு பெற்றவர்கள்
2.  30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
     17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
    (இருவருமே வேலை செய்யறதில்லை)
3. 1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
4. 25 கோடி பள்ளில படிப்பவர்கள்
5. 1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்
6. 15 கோடி வேலை தேடுவோர்
7. 1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
8. ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்.

மிச்சம் இருப்பது நீயும் நானும்
நீ எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி

அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்.

சிரிப்பதற்கு மட்டும் அல்ல இது. சிந்திக்கவும் தான்.

விடை கிடைத்தால் என்னக்கும் கொஞ்சம் சொல்லுக்களேன்.

Monday, August 16, 2010

Welcome to All

என் அன்பு நண்பர்களே!
இது எனது பக்கம். நானும் இந்த பக்கத்தின் வழியாக என் கருத்துகளை உங்களிடம் சொல்ல போகின்றேன்.

உனக்கு என் இந்த வேண்டாத வேலை என்று சொல்வது என் காதில் விழுகிறது. என்ன செய்வது?. இந்த நாட்டை பற்றியும் நமது சமுகத்தை பற்றியும் என் மனதில் உள்ள கருத்துகளை உங்களிடம் பகிர்த்து கொள்ள எனக்கு கிடைத்த மிக அரிதான வாய்ப்பு.

சரியாக இருந்தாலும் சரி, தவறாக இருந்தாலும் சரி, என் கருத்துகள் பற்றிய உங்கள் மன பதிவுகளையும் என்னோடு பகிர்த்து கொள்ளலாம்.

என்ன நண்பர்களே!
ரெடி தானே!

வெகு விரைவில் உங்களை சந்திக்க துடிக்கும் உங்கள் அன்பு நண்பன்
ஆரோக்கியராஜ்.
வணக்கத்துடனும் வாழ்த்துகளுடனும்.