ஹலோ நண்பர்களே!
இலவசமா கொடுத்தா எதை வேண்டுமானாலும் வாங்கிகுவான் நாம தமிழன். என்ன சரி தானே. இப்போ தமிழ்நாட்டுல நடப்பது இது தான்.
அரசியல்வாதி ஒட்டுக்காக கண்டுபிடித்த ஜனநாயக வார்த்தை தான் இந்த இலவசம்.
யார் கேட்டார் இந்த இலவச ஜனநாயகத்தை.
இலவச டிவி : நாட்டில் மனிதனுக்கு உண்ணும் உணவிற்கே வழியில்லை. பிறகு எதுக்கு இந்த டிவி?. இந்த தமிழக முதலமைச்சரை தோழமை கட்சிகளும், சினிமா உலகத்தினரும் இந்திரனே சந்திரனே என்று புகழ்வதை பாமரமனிதன் வயிற்று பசியுடன் கண்டு இன்பம் பேரவா?.
நாட்டுல பாதி நேரம் கரண்ட் இல்லாதபொது பிறகு எதுக்குயா இந்த டிவி.
இலவச மருத்துவ காப்பிடு : நல்ல திட்டம் தான் பிகார் போன்ற மருத்துவ வசதி மேன்மை அடையாத மாநிலத்துக்கு மட்டும். என்ன வசதி இல்லை இந்த தமிழ் நாட்டில். பக்கத்துக்கு தேசமான பாகிஸ்தானில் இருந்து நம்ம சென்னைக்கு மருத்துவ வசதி வேண்டி வரும்போது, இங்குள்ள ஆரசு மருத்துவமனைகளை இன்னும் சிறப்பாக செயல்படுத்தினாலே என் போன்ற பாமரமக்களுக்கு எல்லா சிகிச்சையும் கிடைத்துவிடுமே. பிறகு யாருக்கு இந்த திட்டம். மக்களுக்கும் ஆரசுக்கும் இடையில் இருப்பவர்கள் தங்களுக்கு பணம் சேர்கவா?
இலவச காஸ் அடுப்பு : கி கி கி கி....... நாட்டில் என் போன்ற பாமரமனிதன் ரேசனில் போடும் மண்ணெண்ணையை முப்பது ரூபாய் கொடுத்து வாங்க முடியாத அளவிற்கு மற்ற பொருள்களின் விலைவாசி உயர்வு இருக்கும்பொது, காஸ் அடுப்பு எதற்கு? . வீட்டு பரண்மேல் அழகாக அடுக்கி வைக்கவா?. பாமரமனிதன் இதை வேறு என்ன செய்ய முடியும்.
இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் வரபோகுது. இன்னும் இலவசங்கள் பெருகபோகின்றன. தேர்தல் நேரத்தில் கிடைக்கும் சொற்ப பணத்தை பெற்றுக்கொண்டு தனது ஜனநாயக கடமையாக தன்னையே அடமானம் வைக்கவிருகிறான் தமிழன் (என்னையும் சேர்த்துதான்). பாவம் தமிழன் வேறு என்ன தான் செய்ய முடியும் அவனால்.
வாழ்க ஜனநாயகம். வளர்க தமிழனின் ஜனநாயக கடமை.
இது பிற மனிதர்களின் உள்ளத்தை காயபடுத்த அல்ல. என் காயத்திற்கு மருந்திட மட்டுமே.
சிந்திப்பாயா தமிழா!
எதிர்பார்ப்புடன்,
உன் நண்பன்.
Tuesday, August 17, 2010
HoW cAn I SaVE My INdiA
ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.
மக்கள் தொகை: 110 கோடி
1. 9 கோடி ஓய்வு பெற்றவர்கள்
2. 30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)
3. 1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
4. 25 கோடி பள்ளில படிப்பவர்கள்
5. 1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்
6. 15 கோடி வேலை தேடுவோர்
7. 1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
8. ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்.
மிச்சம் இருப்பது நீயும் நானும்
நீ எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி
அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்.
சிரிப்பதற்கு மட்டும் அல்ல இது. சிந்திக்கவும் தான்.
விடை கிடைத்தால் என்னக்கும் கொஞ்சம் சொல்லுக்களேன்.

Monday, August 16, 2010
Welcome to All
என் அன்பு நண்பர்களே!
இது எனது பக்கம். நானும் இந்த பக்கத்தின் வழியாக என் கருத்துகளை உங்களிடம் சொல்ல போகின்றேன்.
உனக்கு என் இந்த வேண்டாத வேலை என்று சொல்வது என் காதில் விழுகிறது. என்ன செய்வது?. இந்த நாட்டை பற்றியும் நமது சமுகத்தை பற்றியும் என் மனதில் உள்ள கருத்துகளை உங்களிடம் பகிர்த்து கொள்ள எனக்கு கிடைத்த மிக அரிதான வாய்ப்பு.
சரியாக இருந்தாலும் சரி, தவறாக இருந்தாலும் சரி, என் கருத்துகள் பற்றிய உங்கள் மன பதிவுகளையும் என்னோடு பகிர்த்து கொள்ளலாம்.
என்ன நண்பர்களே!
ரெடி தானே!
வெகு விரைவில் உங்களை சந்திக்க துடிக்கும் உங்கள் அன்பு நண்பன்
ஆரோக்கியராஜ்.
வணக்கத்துடனும் வாழ்த்துகளுடனும்.

Subscribe to:
Posts (Atom)